Wednesday, March 27, 2013
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 97 இலங்கையர்கள் ஒலுவில் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த படகு இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 39 ஆண்களும் 18 பெண்களும் 40 சிறார்களும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
21 பேர் இந்தோனேசியாவில் கைது!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 21 இலங்கை தமிழர்கள் இந்தோனேசிய கடலோர காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன்.
கிழக்கு ஜாவா பகுதியின் சென்டாங்பிரு – மலாங் கடற்பிராந்தியத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம் பயணித்த படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, படகில் பயணித்தவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக நீர் ஆகாரம் இன்றி இருந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் மலாங் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

No comments:
Post a Comment