Saturday, February 09, 2013
இலங்கை::கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் தொடர்பில் மேன்முறையீடொன்றை தாக்கல் செய்வதற்கு அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டாரிலுள்ள சட்டத்தரணியொருவரை சந்தித்து அண்மையில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக இலங்கை தூதரகத்தின் பணியாளர் நலன்புரி அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கிற்காக செலவாகும் கட்டணங்களை செலுத்துவதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்டாரில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் அறுபது நாட்களுக்குள் அது தொடர்பான மேன்முறையீட்டை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
சுதேஷ்கர் கேரளாவைச் சேர்ந்த இளைஞரை கொலை செய்ததாக கட்டாரில் அவருக்கு கடந்த டிசம்பர் 31ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் சமரச முயற்சியின்போது 35 இலட்சம் ரூபா குருதிப் பணத்தை பெற்று சுதேஷ்கரை மன்னிப்பதற்கு கொல்லப்பட்டவரி்ன் குடும்பத்தார் ஒப்புக்கொண்டனர்.
அந்த தொகையை வழங்குவதற்கு வெங்கடாசலம் சுதேஷ்கரின் உறவினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment