Saturday, February 09, 2013
சென்னை::ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு எதிராக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை, ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கண்டித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், அவர் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, பிரித்தானியர் காலத்தில், இந்தியாவின் நடமாட்ட சுதந்திரத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும்.
இது இந்து மதத்துக்கு எதிரான கட்சியும் ஆகும்.
அத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பன, புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது, தமிழ்நாட்டில் பயங்கரவாதத்தை தோற்றுவிப்பதாக அமையும்.
எனவே இது தொடர்பில் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரமணியம் சுவாமி தமது அறிக்கையில் கோரியுள்ளார்.

No comments:
Post a Comment