Thursday, February 7, 2013

யாழ். தினக்குரல் பத்திரிகை விநியோகத்தர் மீது மீது தாக்குதல்: பத்திரிகைகள் தீக்கிரை!

Thursday, February 07, 2013
இலங்கை::யாழ். தினக்குரல் பத்திரிகை விநியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். அத்துடன் அவர் விநியோகிப்பதற்கான எடுத்துச்சென்ற பத்திரிகைகள் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிள்; தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மீது கம்பியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ். புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு அருகாமையில் இன்று காலை 4.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் சிவகுமார் (வயது 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரும்பு கம்பிகளினாலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

புன்னாலைக்கட்டுவனில் இருந்து புத்தூர் பகுதியை நோக்கி பத்திரிகைகள் விநியோகித்து செல்லும் போது, இன்று அதிகாலை 4.15 மணியளவில் சிறுப்பிட்டி பகுதியில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு அருகாமையில் வழிமறித்து கம்பியால் தாக்கியதுடன், மோட்டார் சைக்கிள் மீது பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர்.

கம்பியால் தாக்கப்படட்டு படுகாயமடைந்த அவர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு சென்று அங்கிருந்து இராணுவத்தினரின் தொலைபேசி மூலம் தினக்குரல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், பின்னர் இராணுவத்தினர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தாக்குதலுக்கு இலக்கானவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment