Tuesday, February 05, 2013
இலங்கை:::இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் கிராம அலுவலர் பிரிவிலேயே நேற்று திங்கட்கிழமை காலை இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 65ஆவது சுதந்திரதினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சியில் அமைந்திருக்கும் 571ஆவது படையணியின் தளபதி கேணல் அமரசேகர தலைமையில் வீடமைப்புக்கு தெரிவுசெய்யப்பட்ட பகுதிக்குரிய போக்குவரத்துக்கான பாதையை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பணியில் பிரதேச மக்களும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கிருஷ்ணபுரத்தில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களின் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான அடிக்கல்லினை கிளிநொச்சி பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் செல்வம், 571ஆவது படையணியின் தளபதி கேணல் அமரசேகர ஆகியோர் நாட்டிவைத்தனர்.
கிளிநொச்சியில் இவ்வாறு இணைந்திருக்கும் 20 பெண் இராணுவத்தினருக்கான வீடுகள் முதற்கட்டமாக அமைக்கப்படுமென இந்நிகழ்வில் உரையாற்றிய கேணல் அமரசேகர தெரிவித்தார்

No comments:
Post a Comment