Tuesday, February 5, 2013

புலி கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்பியின் தொடரும் தில்லுமுல்லு.. லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் செயல்பாட்டையும், தனது பெயரில் பதிந்தார்.. "லங்கா ஸ்ரீ"யின் அப்பட்டமான பொய்!

Tuesday, February 05, 2013
இலங்கை:::புலி கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்பியின் தொடரும் தில்லுமுல்லு.. லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் செயல்பாட்டையும், தனது பெயரில் பதிந்தார்.. "லங்கா ஸ்ரீ"யின் அப்பட்டமான பொய்!!

லண்டனில் புலம் பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மக்களின் லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் ஊடாக புங்குடுதீவில் வாழும் மக்களுக்கு ஆயிரம் தென்னங்கன்றுகள் அண்மையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீதரன் எம்பியின் சகோதரரால் நடாத்தப்படும் "லங்காஸ்ரீ" இணையதளம் இதனை தனது சகோதரனின் செயல்பாடு என உரிமை கொண்டாடி உள்ளது. ஆயினும் இது குறித்து லண்டன் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் நாம் விசாரித்த போது "இந்த நடவடிக்கை முன்னெடுக்க காரணமாக அமைந்தவர் ஸ்ரீதரன் எம்பி தான் எனவும், அவர் சிலகாலங்களுக்கு முன்னர் (ஸ்ரீதரன்) லண்டன் வந்திருந்த போது புங்குடுதீவு அபிவிருத்திக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கும்படி கூறியதாகவும், இதன்பின்னர் எமது அமைப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடியே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு நாம் நிதி சேகரித்து எமது அமைப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையை புங்குடுதீவில் முன்னெடுக்க ஆரம்பித்து அங்குள்ள சிலரிடம் (அமைப்புக்களிடம்) உதவி கோரிய பொது பலரும் பற்பல காரணங்களைக் கூறி பின்வாங்கிய போதும் இதனை முன்னின்று உதவி புரிந்தவர் புங்குடுதீவு ஆலய அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் என்பவர் தான் என்பதுடன் தொடர்ந்தும் அவரே எமக்கு உதவியாக உள்ளார் என்பதுடன், இது போன்ற நிகழ்வை முன்னெடுக்க அறிவுரை கூறியவர் ஸ்ரீதரன் எம்பி என்பதினால் அவரையும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தாரே தவிர, இந்த நடவடிக்கை யாவும் லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்களாலும் புங்குடுதீவில் வாழும் மக்களாலுமே முன்னெடுக்கப்பட்டு இருந்தது என்பதே உண்மை" என்றனர்.

இது இப்படியிருக்க லண்டனில் புலம் பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மக்களின் "லண்டன் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின்" ஊடாக புங்குடுதீவில் வாழும் மக்களுக்கு ஆயிரம் தென்னங்கன்றுகள் அண்மையில் வழங்கப்பட்ட இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்ரீதரன் எம்பியின் சகோதரரால் நடாத்தப்படும் "லங்காஸ்ரீ"யின் இணையதளம் இதனை தனது சகோதரனின் செயல்பாடு என உரிமை கொண்டாடி உள்ளது. இதுகுறித்து உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமைப்பாட்டில் "நடந்த உண்மையை" பகிரங்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இனிவரும் காலங்களிலாவது பொய்களை எழுதாமல், "மற்றவர்களின் போர்வைக்குள் குளிர் காயாமல்" உண்மைகளை எழுதுங்கள். நன்றி!!!

(சுவிட்சர்லாந்த் றஞ்சன்)

No comments:

Post a Comment