Monday, February 4, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்த் தேசியக் (புலிகளின்) கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது!

Monday, February 04, 2013
இலங்கை::தென்னாபிரிக்காவின் விஜயத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லை. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தீய நோக்கங்களை கைவிடச் செய்யவும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த்தேசியக்   (புலிகளின்) கூட்டமைப்பு கோரியுள்ளது.

 (புலி) கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது.

முரண்பாடு தீர்த்தல், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய தமது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தென்னாபிரிக்க மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகியன மேற்கொண்ட முன்னெடுப்புக் காரணமாகவே இத்தூதுக்குழு தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளது.

தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதியமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவொன்று 2011ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தபோது இவ்வாய்ப்பை இலங்கை அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வழங்க முன்வந்தபோது தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பு இதை ஏற்றுக்கொண்டது.

இலங்கை அரசாங்கம் ஜனவரி 2011இல் த.தே.கூட்டமைப்புடன் இனப்பிரச்சினை தொடர்பில் பேச ஆரம்பித்தது. த.தே.கூ. நேர்மையாகவும் முழுமனதுடனும் செயற்பட்டு அரசியல் தீர்வொன்றுக்கான முழுமையான முன்மொழிவுகளை மார்ச் 2011இல் சமர்ப்பித்தது.

இலங்கை அரசாங்கம் தமது பக்கக் கருத்துக்களை, 5 மாத காலத்தில் 7 கூட்டங்கள் நடந்தபோதும் முன்வைக்கத் தவறியது. இதனால் அடுத்த கூட்டத் திகதியொன்றுக்கு ஒப்புக்கொள்ள த.தே.கூ. மறுத்தது.

இதன் பின்னர் ஜனாதிபதி த.தே.கூ. தலைவரைச் சந்தித்ததைத் தொடர்ந்து பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் இருபக்க பேச்சுவார்த்தை 16ஆம் திகதி செப்டெம்பர் மாதம் 2011இல் மீண்டும் தொடங்கப்பட்டது.

1.இலங்கை அரசாங்கத்தின் பதில் கருத்துக்கு பதிலாக முன்னைய 5 முன்மொழிவுகளையிட்டு பேச வேண்டும்.

2.த.தே.(புலி) கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதும் த.தே.கூ. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சேரும்.

ஆயினும் மேற்கூறிய ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசாங்கம் ஜனவரி மாதம் 2012இல் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது. இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதப்போக்குக் காரணமாக ஸ்தம்பித நிலையை உடைப்பதற்கான 2 முயற்சிகள் தோல்வி கண்டன.

ஸ்தம்பித நிலை இன்றுவரை தொடர்கின்றது. பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை இராணுவ நிதியில் ஒடுக்குகின்ற வடக்கு, கிழக்கு பகுதிகளின் சனத்தொகை அமைப்பை மாற்றுகின்ற தனது வேலைத்திட்டத்தை ஆக்ரோஷத்துடன் தொடர்ந்து வருகின்றது.

இப்பின்னணியில்தான் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மார்ச் 2012இல் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இதை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பெரிதும் தவறிவிட்டது.

25 பெப்ரவரி 2013இல் தொடங்கவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் 22ஆவது அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் செயலின்மை மீது முக்கிய கவனம் செலுத்தப்படும்.

நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென நாம் நம்புகின்றோம்.

இப்பின்னணியில் தற்போது த.தே.கூ. தென்னாபிரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தை சுட்டிக்காட்டி சில முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ளதாக உலகத்துக்கு காட்ட அரசாங்கம் முற்படுமென்பதை நாம் நன்கறிவோம்.

எனவே தென்னாபிரிக்காவின் முன்னெடுப்பு தொடர்பில் எமது செயற்பாட்டுக்கும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லையென்பதை தெளிவுபடுத்த நாம் விரும்புகின்றோம்.

இத்தீர்மானத்துக்கமைய (இலங்கை அரசாங்கம்) நடக்கவும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தீய நோக்கங்களை கைவிடச் செய்யவும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்த ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் பொருத்தமான நடவடிக்கை மிக அவசியமெனவும் நாம் கருதுகின்றோம்.

No comments:

Post a Comment