Friday, February 08, 2013
இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீளாய்வு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம், கடந்த ஆண்டு இந்த மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் மூலம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறுப்புகள் உணர்த்தப்பட்டுள்ளதாக நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எதிர்கால நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கையை வழிகாட்டியாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமானப் பணிகள் தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்ளவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.ஒட்டுமொத்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டமைப்பு முறைமையும் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்ச்சியும் கொண்டதாக அமைய வேண்டுமென நவனீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment