Monday, February 11, 2013

கொழும்பு கலாபவனத்தில் பணிபுரிந்து வந்த கைதிகள் பலரிடம் சோதனை!

Monday, February 11, 2013
இலங்கை::கொழும்பு கலாபவனத்தில் பணிபுரிந்து வந்த கைதிகள் பலரிடம் இருந்து போதை பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பல சிறைச்சாலை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை காவல்துறையின் உளவு பிரிவுக்கு கிடைத்த விசேட பணிப்பின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ . டபிள்யூ கொடிப்பில்லி எமதுசெய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இவர்களிடம் இருந்து கே. ஜீ வர்க்க கஞ்சா பக்கட்டுக்கள் பல, கையடக்க தொலைபேசியுடன் சிம் அட்டைகள் மற்றும் ஒரு தொகை பணமும் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் கடூழிய குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 12 கையடக்க தொலை பேசிகள் கைப்பற்றப்பட்டதுடன், இவற்றுள் இரண்டு தொலை பேசிகள் 3ஜீ ரக தொலை பேசிகள், பல சிம் அட்டைகள், தொலைபேசி சார்ஜர்கள், டேடா கேர்பிள் மற்றும் பல பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த விசேட நடவடிக்கையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சுமார் 60 அதிகாரிகள் பங்குகொண்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ. டபிள்யூ கொடிப்பில்லி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment