Tuesday, February 12, 2013

சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை -புலி பினாமிகளின் ஆதரவளர்களான பழ. நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் கைது!

Tuesday, February 12, 2013
சென்னை::சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை -புலி பினாமிகளின் ஆதரவளர்களான பழ. நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் கைது!

இலங்கை இனப்படுகொலை குற்றவாளிகளாக ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த பான்கி மூன், விஜய்நம்பியார், ஜான் ஹோம்ஸ் ஆகியோரையும் சேர்க்க கோரி சென்னையில் ஐ.நா. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்க அமைப்பாளர் திருமுருகன் அறிவித்து இருந்தார்.


அதன்படி அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த மே 17 இயக்கத்தினருடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹரில்லா எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பேராட்டத்துக்கு போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி போராட்டம் நடத்த ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை கீழே தள்ளி விட்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் முன்னேறி சென்றதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன், வைகோ, ஜவாஹரில்லா எம்.எல்.ஏ., வேல்முருகன் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராஜபக்சே படத்துக்கு செருப்பு மாலை போட்டு எடுத்து வந்தனர். அவரது உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்தனர். இந்த போராட்டம் காரணமாக அடையாறில் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று காலை பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அனைவரையும் தடுத்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

No comments:

Post a Comment