Monday, February 4, 2013

அடையாள அட்டைக்கு அடிதடி மல்லுகட்டும் தி.மு.க.உடன்பிறப்புகள்!

Monday, February 04, 2013
சென்னை::பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள தி.மு.க., உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் மீண்டும் அடிதடி நடந்தது. தலைமை கழக பிரதிநிதிகள், நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த ஒன்றிய செயலரிடம் வாக்குவாதம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில், தி.மு.க., கட்சி தொண்டர்களுக்கு, உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, கடந்த மாதம், 28ம் தேதி நடந்தது. கோஷ்டி மோதல் காரணமாக, அன்று அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, நேற்று, உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.

ராமச்சந்திராபுரம் ஊராட்சியை சேர்ந்த ஐந்தாவது வார்டு அமைப்பாளர் ஏழுமலை, உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார். அவரிடம் இருந்து அந்த அட்டைகளை, ஒன்றிய செயலர் ரவீந்திரநாத் கோஷ்டியினர் பெற்று கொண்டனர். இதை, திருமலைராஜபேட்டை கிளைக்கழக முன்னாள் செயலர் மனோகரன் தட்டிக்கேட்டார். அவரை, ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடித்து உதைத்து மண்டபத்தை விட்டு வெளியேற்றினர். பின், நெடுங்கல் வார்டுக்கான அட்டைகளை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர் வரவில்லை. அவருக்கு பதிலாக அவரது மனைவி வாங்க வந்தார். இதை, ரவீந்திரநாத் கோஷ்டியினர், தடுத்தனர். இதை முன்னாள் ஒன்றிய துணை செயலர் சிவானந்தம் தட்டிக்கேட்டார். அவரையும், அடித்து விரட்டினர்.

 அப்போது, தலைமைக்கழக பிரதிநிதிகள் குறுக்கிட்டனர். உறுப்பினர் வராத சூழ்நிலையில், அதே வார்டை சேர்ந்த பட்டியலில் உள்ள நபர் வாங்கலாம் என விதிமுறை உள்ளபோது, நீங்கள் அதை ஆட்சேபம் செய்வது முறையான செயல் இல்லை என வாக்குவாதம் செய்தனர். தலைமை கழக பிரதிநிதிகளே, ஒன்றிய செயலரின் செயலுக்கு ஆட்சேபம் தெரிவித்த சம்பவத்தால், கட்சியில் மற்ற பொறுப்பாளர்களும், தொண்டர்களும், கடும் அதிருப்தி அடைந்தனர்.

No comments:

Post a Comment