Wednesday, February 13, 2013

சர்வதேச சட்டங்கள் இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது - ஐ.நாவின் அறிக்கை!

Wednesday, February 13, 2013
coming,soon,images,பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைக்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தயாரித்த முழுயான அறிக்கை இன்று வெளியானது.

18 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளின் சாரம்சங்களும் அதில் உள்ளக்கப்பட்டுள்ளன.

இதன் ஊடாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால், நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்துவது மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பரிந்துரைகள் சிலவற்றை மாத்திரம் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்கள் இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற வற்றில் அரசாங்கத்தின் மேற்கொண்ட செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் உள்ளன.

எனினும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் சட்டத்தையும், நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க மேலும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மனித உரிமை குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் திருப்திகரமான அல்லது சுயாதீனமாக செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமாக இருந்தால், மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளை பக்கச்சார்பின்றி முன்னெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடத்தல், காணாமல் போதல் போன்ற நடவடிக்கைகள் கடந்த வருடத்தில் அதிகரித்திருப்பதாகவும், அவற்றுக்காக தெளிவான எந்த ஒரு செயற்பாட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று, ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் சாரம்சத்தில், இறுதியாக சுட்டிக்காட்ட விடயம்:, குறித்துக் கூறப்பட்ட விடயங்களையும், அவற்றை சீர் செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் வழிகாட்டல் உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment