Sunday, February 24, 2013
சென்னை::அடுத்த மாதம், 7ம் தேதி, டில்லியில் நடக்கும், (புலி ஆதரவு)"டெசோ' மாநாட்டில், பா.ஜ., தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இம்மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்@கற்று, தேசிய அரசியலில், புது அணியை உருவாக்குவதற்கு அச்சாரம் அமைப்பாரா என்ற சந்தேகம், காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது.
(புலி ஆதரவு) டெசோ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் இம்மாதம், 25ம் தேதி அறிவாலயத்தில் கூடுகிறது.அக்கூட்டத்தில், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும், அடுத்த மாதம், ஐ.நா., மனித உரிமை கமிஷனில் நடைபெறும் கூட்டத்தில், இலங்கை அரசை நிர்பந்திக்கும் வகையில், புதிய தீர்மானத்தை அமெரிக்க அரசு தாக்கல் செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், அந்தத் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க, எப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும், அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.அடுத்த மாதம், 7ம்தேதி, டில்லியில், "ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்', (புலி ஆதரவு) சேனல் 4', "மனித உரிமைகள் கண்காணிப்பு' ஆகிய அமைப்புகள் பங்கேற்கும், டெசோ மாநாடும், இந்த மாநாட்டையொட்டி, டில்லி கான்ஸ்ட்யூஷன் கிளப் அரங்கில் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது.
(புலி ஆதரவு) டெசோ மாநாட்டில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, சரத்பவார், முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர்களை தவிர்த்துவிட்டு, மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுப்பது, தி.மு.க., மீது, காங்கிரஸ் மேலிடத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியு உள்ளது.
இலங்கை தமிழர்கள் பிரச்னையில், காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு அக்கறையும் இல்லை. புலிகளுடன் இலங்கை ராணுவம் நடத்திய போருக்கு, காங்கிரஸ் கட்சியே காரணம் என, குற்றம் சொல்வதற்கும், லோக்சபா தேர்தலுக்காக, காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைத்து, புதிய அணியை உருவாக்க தி.மு.க., திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில் லோக்பா தேர்தலின்@பாது, இலங்கை தமிழர்கள் பிரச்னை எதிரொலிக்கவுள்ளது. ஓட்டு வங்கியை அறுவடை செய்வதற்காக, அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகள் ஒட்டுமொத்த கட்சிகளும் இலங்கை பிரச்னையை கையில் எடுத்துள்ளது.இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகள போட்டியை, தமிழக அரசு அனுமதிக்காது, என, முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலங்கை பிரச்னையில் அ.தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெசோ மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இலங்கை தமிழர்கள் பிரச்னையை மையப்படுத்தி, லோக்சபா தேர்தலுக்கு முன், காங்கிரஸ் கட்சியை விட்டு, தி.மு.க., வெளியேறி, தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியமில்லை.அதேசமயம் தி.மு.க., வின் டெசோ மாநாடு, கருத்தரங்கத்தை பற்றி காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. டெசோ மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்பது, "சஸ்பென்ஸ்' ஆக வைக்கப்பட்டுள்ளது.
கடைசி நிமிடத்தில், அவர் கலந்து கொண்டு, பா.ஜ., தலைவர்களுடன் கைகோர்ப்பது, லோக்சபா தேர்தலில், தேசிய அளவில், புது அணியை உருவாக்குவதற்கு அச்சாரமாக அமையுமா என்ற சந்தேகம் காங்கிரஸ் கட்சிக்கு எழுந்துள்ளது.மொத்தத்தில் டில்லி டெசோ மாநாட்டில், கருணாநிதி பங்கேற்பதன் மூலம், தேசிய அரசியலில் திருப்பு முனை ஏற்படுத்துமா என்பது, போக போகத்தான் தெரியும்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment