Monday, February 11, 2013
இலங்கை::யாழ். கொடிகாமம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரவுநேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கொடிகாமம் கச்சாய் பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
கைதுசெய்யப்பட்டவர்கள் சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment