Wednesday, February 13, 2013

வைகோ ஜெயிக்கட்டும் பார்க்கலாம்: இந்தியாவின் மாநில அரசியல்வாதிகளை திருப்திபடுத்த வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது - கெஹலிய ரம்புக்வெல்ல!

Wednesday, February 13, 2013

இலங்கை::இந்தியாவின் மாநில அரசியல்வாதிகளை திருப்திபடுத்த வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது... என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ம.தி.மு.க. என்ற மாநில கட்சி தலைவர் வை.கோ. போன்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை, என இலங்கை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அயல் நாடான இந்தியாவுடன், இலங்கை அரசு ராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை, அணிசேரா தன்மையைக் கொண்டது. இதனால் இந்தியாவைப் போன்றே சீனாவுடனும் சிறந்த உறவுகள் பேணப்படும்.

ஆனால், இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் நாம் கொண்டுள்ள நட்புறவை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்தியாவில் சொந்த மாநிலத்திலேயே ஜெயிக்க முடியாத, மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள முடியாத சில அரசியல்வாதிகள், தங்களது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த முயற்சிகள் பலிக்காது. இந்தியாவில், அவர்களது சொந்த மாநிலத்தில்கூட 10 சதவீத ஆசனங்களை ஜெயிக்க முடியாதவர்கள், வெளிநாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடியுமா ? இதனால், ம.தி.மு.க. என்ற மாநில கட்சி தலைவர் வை.கோ. போன்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை... என்றார்.

No comments:

Post a Comment