Thursday, February 07, 2013
சென்னை::தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும் சட்ட மன்றக் கூட்டத்தொடரில், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதும், தேமுதிக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மன்றத்தில் திமுக உறுப்பினர்கள் இருந்தனர். அப்போது, இலங்கை சென்ற மத்திய எம்.பி.க்கள் குழுவில் திமுகவின் எம்.பி. கனிமொழி இலங்கைக்குச் சென்றது குறித்து தமிழக அமைச்சர் முனுசாமி கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதை அடுத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்றும் படி அவைத் தலைவர் உத்தரவிட்டார். இதை அடுத்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

No comments:
Post a Comment