Thursday, February 07, 2013
இலங்கை::ஆட்கடத்தல்காரர்கள் வருடாந்தம் 32 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இலாபம் ஈட்டுவதாக சர்வதேச தொழிலாளர்கள் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டொங்லின் லீ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஆட்கடத்தல் மற்றும் பலவந்தமாக தொழிலில் அமர்த்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அறிக்கையிடலுக்கான வழிகாட்டல் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இந்த வழிகாட்டல் நூலை வெளியிட்டது.
இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
உலகில் சுமார் 2.4 மில்லியனுக்கும் அதிகமானோர் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர்கள் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment