Saturday, February 2, 2013

இலங்கைக்கான தமது பிரதிநிதிகளின் விஜயத்தை இரத்துச் செய்ய அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளது - சர்வதேச சட்ட வல்லுனர்கள் சங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைப்பு!

Saturday, February 02, 2013
இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதியை இலங்கை அரசாங்கம் கடைசி நேரத்தில் நிராகரித்தமையினால் தமது பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தை இரத்துச் செய்வதற்கு அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச சட்ட வல்லுனர்கள் சங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சட்டவாதிக்கம் சீர்குலைவு மற்றும் நீதிமன்ற சுயாதீனத் தன்மை ஆகிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக உயர்மட்டத்திலான சர்வதேச ஜூரர்கள் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடவிருந்ததாக பீ.பீ.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தூாதுக்குழுவின் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கப்படவிருந்த வீசா அனுமதி ஜனவரி மாதம் 29ஆம் திகதி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளதாகவும் பீ்.பீ.சி குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அந்த தூதுக் குழுவின் ஏனைய பிரதிநிதிகளுக்கும் ஜனவரி மாதம் 30ஆம் திகதிகளில் வீசா அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் மீது கடும் ஆட்சேபனை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச சட்ட வல்லுனர்கள் சங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைப்பு இந்த நிலை குறித்து சிறந்த முடிவை எடுப்பதற்காக அதிகாரிகளுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாக பீ.பீ.சி உலக சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை உயர்மட்டத்திலான சர்வதேச ஜூரர்கள் உள்ளிட்ட தூாதுக் குழுவினரின் இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபடவிருந்த இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் ஜே.எஸ்.வர்மா தமது விஜயத்தை இரத்துச் செய்துள்ளார்.

இலங்கைக்கான தமது விஜயத்தை இரத்துச் செய்யத் தீர்மானித்துள்ளதாக த ஹிந்து ஊடகத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான வீசா அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளதா? என த ஹிந்து அவரிடம் வினவியுள்ளபோதிலும் அவ்வாறான சிக்கல் எதுவும் தனக்கு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment