Tuesday, February 5, 2013

இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கோரிக்கை எதனையும் விடுக்கவும் இல்லை அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுக்கவும் இல்லை - மொஹான் சமரநாயக்க!

Tuesday, February 05, 2013
இலங்கை:::இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கோரிக்கை எதனையும் விடுக்கவும் இல்லை அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுக்கவும் இல்லை என்று ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மறுத்துவிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் 50 நாடுகளைச்சேர்ந்த சுமார் 102,000 படையினர் ஆப்கானிஸ்தானில் கடமையில் இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு மற்றும் உதவிப்படை அறிவித்துள்ளது.

பல வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 2004 ஆம் ஆண்டு இறுதியில் வெளியேறுவதற்கு தீர்மானித்திருந்தன. ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற படையில் 68இ000 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment