ஜெருசலேம்::ஈரானின் அண்டை நாடான இஸ்ரேல், அமெரிக்காவின் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'ஏரோ-3' ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக சோதித்தது.
எதிரி நாடுகளால் ஏவப்படும் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை மிக்க இந்த ராக்கெட் இஸ்ரேலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து மெடிட்டேரனியன் கடற்பகுதியில் ஏவி பரிசோதிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய சோதனையில் குறிப்பிட்ட இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படாமல் ராக்கெட்டின் வேகம் மட்டும் பரிசோதிக்கப்பட்டதாகவும் இன்னும் சில மேம்பாடுகளை செய்த பின்னர் முழுவீச்சில் இந்த ராக்கெட்டுகள் விமானப்படையில் சேர்க்கப்படும் எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment