Wednesday, February 06, 2013
எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனைகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகளின் அலுவலகத்தின் தெற்காசியத்திற்கு பொருப்பான அமைச்சர் அலிஸ்டயார் பேர்ட் இந்த இந்த கருத்தை வெளியிட்டார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் நேற்றிரவு சர்வதேச செய்தியாளர்கள், மற்றும் அரசியல் ஆய்வாளர்களுடன் இடம்பெற்ற நேரடி செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை நிலவரங்கள் தொடர்பாக பிரித்தானியா ஆராய்ந்துள்ளதாகவும், அமெரிக்காவின் யோசனைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தமது தரப்பு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் மீளமைப்பு நடவடிக்கைகளில் குறிப்பிட்ட மேம்பாட்டை கண்டுள்ள போதும், சரியான இலக்கை இன்னமும் அடையாமல் இருப்பதே இதற்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதவிர, இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறும் மாநாட்டில் பிரித்தானியாவின் பங்களிப்பு குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும் அலிஸ்டயர் பேர் கூறினார்.



No comments:
Post a Comment