Saturday, February 2, 2013

வடபகுதியை சேர்ந்த யுவதிகள் போல், மலையக யுவதிகளும் இராணுவத்தில் இணைய சந்தர்ப்பத்தை வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Saturday, February 02, 2013
இலங்கை::வடபகுதியை சேர்ந்த யுவதிகள் போல், மலையக யுவதிகளும் இராணுவத்தில் இணைய சந்தர்ப்பத்தை வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கில் தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்டதன் மூலம் வடக்கு, கிழக்கில் அமைதியை பாதுகாக்க சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த இது உதவியாக அமையும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரி.வி. சென்னன் தெரிவித்துள்ளார்.

மலையகத்தை சேர்ந்த யுவதிகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையக இளைஞர், யுவதிகளுக்கு இராணுவத்தில் இணைய சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி ஜனாதிபதி கடிதம் அனுப்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவசரமான சந்தர்ப்பங்களில் மலையகத்தின் பாதுகாப்பு கடமைகளில் இவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் சட்டத்தையும், அமைதியையும் இலகுவதாக உறுதிப்படுத்த முடியும்.

மேற்படி கோரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானினால் அடுத்த சில தினங்களில் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்படும் எனவும் ரி.வி. சென்னன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment