Wednesday, February 13, 2013
இலங்கை::ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த உறவுகளைப் பேண விரும்புவதாக இலங்கை அறிவித்துள்ளது. இறைமையுடைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், இலங்கையும் நல்லாட்சி, சமூக நீதி, சமத்துவம் போன்ற விடயங்களில் வௌ;வேறு வழிமுறைகளைப் பின்பற்றி இலக்குகளை அடைந்த போதிலும், உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். ஹம்சா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிற்கும் இலங்கைக்கும் 400 ஆண்டுகள் உறவுகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கலாச்சாரம், சமூகம், கல்வி, கல்வி மற்றும் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். 30 ஆண்டு கால பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு நாடு முன்னேற்றத்தை பதிவு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment