Saturday, February 02, 2013
இலங்கை::நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுவதில்லை என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படும் தமிழர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை அதிகாரிகள் சித்திரவதை செய்கின்றார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது எனவும், மனித உரிமை அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்கள் ஏறறுக்கொள்ளக்
புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் மனித உரிமை நிலைகைமள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்வதாக சில மனித உரிமை அமைப்பு;ககள் குற்றம் சுமத்தி வருகின்றன.
எனினும், இலங்கை விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மாறுபட்ட கருத்தையே வெளியிட்டுள்ளார்.
நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தவறாக நடத்தப்படுகின்றார்கள் என்பதற்கு எவ்வித சாட்சியங்களும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டமை தொடர்பான சாட்சியங்கள் காணப்படுவதாகவும் அதனை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
யதார்த்தமான நட்பு நாடாக திகழ பிரித்தானியா விரும்புகின்றது – அலிஸ்டர் பர்ட்!
யதார்த்தமான நட்பு நாடாக திகழ பிரித்தானியா விரும்புவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் கபடமற்ற யதார்த்தமான நட்புறவு நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை, பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை என்ன தீர்மானம் எடுத்தாலும் அது நாட்டின் நலனை அடிப்படையாகவே அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச விவகார மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment