Saturday, February 02, 2013
இலங்கை::அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி படகுகளில் வரும் இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் திரும்பியனுப்பும் செயன் முறையானது, இலங்கைத் தீவில் இருந்து படகுகள் மூலம் வரும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கும் போது அரசாங்கமானது அகதிகள் இல்லாமல் படகுகள் மூலம் வரும் புகலிடம் கோருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகக் கூறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நாங்கள் 700 க்கும் அதிகமானவர்களை கட்டாயத்தின் பேரில் இலங்கைக்கு திருப்பியுள்ளதாக திரு.போவென் புதன்கிழமை ஸ்கை செய்திக்கு தெரிவித்தார்.
கடல் வழியாக படகுகளில் வந்து புகலிடம் கோரும் பப்புவா நியூ கினியாவில் உள்ள நவ்ரு மற்றும் மனூஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுல் மொத்தமாக 942 பேரை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி வரை ஆஸ்திரேலிய அரசாங்கம் சுயவிருப்பின் பேரிலும் கட்டாயத்தின் பேரிலும் திருப்பி அனுப்பியுள்ளது. இவர்களுல் 213 பேர் அவுஸ்திரேலியாவின் புதிய சட்டத்தின்பின்னர் இலங்கைக்கு சுயவிருப்பின் பேரில் திரும்பியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment