Friday, February 1, 2013

யுத்தம் காரணமாக இன சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த உள முரண்பாடுகளை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முனைப்பு பாராட்டப்பட வேண்டியது - அலிஸ்டயர் பர்ட்!

Friday, February 01, 2013
இலங்கை::இலங்கையில் சில சவால்கள் தொடர்ந்தும் எஞ்சியிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் பின்னர் இலங்கையில் சில பகுதிகளில் காணப்படுகின்ற அபிவிருத்தி மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக இன சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த உள முரண்பாடுகளை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முனைப்பு பாராட்டப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணத்திற்கான விஜயத்தின் போது நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் உயிர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளை பிளவடையச் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இளம் தலைமுறையினர் மேற்கொண்டு வரும் முயற்சி பாராட்டுக்குரியது என அலிஸ்டர் பர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment