Tuesday, February 05, 2013
சென்னை::இலங்கை அதிபர் ராஜபக்ஷே வருகையை கண்டித்து வரும் 8ம் தேதி சென்னையில் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்று (புலி ஆதரவு) டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டெசோ கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* இலங்கையில் தமிழ் மொழி., தமிழ் கலாச்சாரத்தை நீர்த்து போக செய்வது, தமிழர்கள் அடையாளங்களை அழிப்பது, தமிழர்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைப்பதில் இலங்கை அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. தமிழர்கள் வாழும் 89 கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.
367 இந்துக் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அரூ.க்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்னை திமுக தலைவர் கருணாநிதி கவனத்துக்கு வந்தவுடன், அவர், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு கடிதம் எழுதி உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை உலகத் தமிழ் சமுதாயம் நன்றி கூறி பாராட்டியது. தமிழர்களுடைய அடையாளம் அரூ.க்கப்பட வேண்டும் என்றும், சிங்கள இன அரசு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், திட்டமிட்டு செயல்படும் சிங்கள அரசை கண்டிப்பதோடு, இவ்வாறான சர்வாதிகார நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசும், உலக நாடுகளும் தலையிட வேண்டும்.
* ஐ.நா. மனித உரிமை ஆணைய கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசை நிர்பந்திக்கும் வகையில் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்ய உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மூர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசை கண்டிக்கும் அத்தகைய தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், எவ்வித ஐயத்திற்கும் இடம் தராத, உறுதியான நிலைப்பாட்டை எடுத்து ஈழத் தமிழருக்கு விரைவில் வாழ்வுரிமை கிடைக்கும் வகையில், இந்திய அரசு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.
* சிறை பிடிக்கப்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்.
* தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் வரும் 18 ம் தேதியும், நாகையில் வரும் 19 ம் தேதியும் டெசோ அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
* ராஜபக்ஷேயின் இந்திய வருகையைக் கண்டித்து வரும் 8ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் கறுப்பு உடை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
* இலங்கையில் ஈழத் தமிழர்கள் படும் அவலங்களையும், துன்பங்களையும் விளக்கும் வகையில், டெல்லியில் வரும் மார்ச் மாதத்தில் டெசோ இயக்கத்தின் சார்பில் அனைத்திந்திய அளவில் அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஒரு கருத்தரங்கம் நடத்துவது என்று இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



No comments:
Post a Comment