Friday, February 08, 2013
இலங்கை::மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் இரண்டு சந்தேகநபர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று அநுராதுபுரம் மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் ஜானக்க பெரோவை கொலைசெய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரதிவாதிக்கு 34 இலட்சம் ரூபா பணமும் இரண்டாவது பிரதிவாதிக்கு வழங்கிய 20 இலட்சம் ரூபா பெறுமதியான கைக்கடிகாரமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று நீதிமன்றில் சமரப்பிக்கப்பட்டது.
இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 2008ஆம் ஆண்டு ஒக்டாபர் 8ஆம் திகதி நடத்தப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment