Tuesday, February 05, 2013
இலங்கை:::நீர்கொழும்பிலிருந்து 200 கடல் மைலுக்கு அப்பால் படகு கவிழ்ந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மூவரை இலங்கை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் நீர்கொழும்புக்குச் சென்று இம்மீனவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவர்களுக்கு அவசரகாலச் சான்றிதழ்களை வழங்கவுள்ளதுடன், இவர்கள் சுகமடைந்தவுடன் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமெனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன

No comments:
Post a Comment