Tuesday, January 8, 2013

மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை - இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய!

Tuesday, January 08, 2013
இலங்கை::மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகளின் போது முப்படையினரின் பங்களிப்பு பிழையான பிரச்சாரம் செய்யப்படுவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவ பயிற்சியில் படையினர் ஒரு சிறியளவிலான பயிற்சிகளை மட்டுமே மாணவர்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவைகள் ஒன்றியம் ஆகியன பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களில் பயிற்சி வழங்கப்பட்டாலும் பல்கலைகக் பேராசிரிர்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுமே பயிற்சிகளை நிர்வாகம் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். உயர்கல்வி அமைச்சின் கொள்கைகளுக்கு அமைவான முறையில் பயிற்சிகள் நடாத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரே தடவையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு தங்மிட வசதிகளை வழங்கக்கூடிய ஒரே இடமாக இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும் இதனால் தலைமைத்துவ பயிற்சிகளை முகாம்களில் நடாத்துவதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment