Tuesday, January 8, 2013

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினரான ஹசித்த மடவல கொலை: 5 சந்தேக நபர்கள் கைது, கொலைக்காக பயன்படுத்திய துப்பாக்கியும் மீட்பு!

Tuesday, January 08, 2013
இலங்கை::ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினரான ஹசித்த மடவலவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முற்படுகையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது

No comments:

Post a Comment