இலங்கை::தைப்பொங்கல் தினம். உலகெங்கும் வாழும் பிற மொழிகள் பேசும் இந்துக்களும், தமிழ் மொழிபேசும் இந்துக்களும் இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். இலங்கையில் கொடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டதன் பின்னர் நாட்டில் அமைதிச் சூழல் திரும்பிய நிலையில் இலங்கை வாழ் இந்துக்கள் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இம்முறை நான்காவது தடவையாக இப்பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இடம் பெற்ற பொங்கல் விழாக்களின்போது அந்தக் கொடிய யுத்தம் முடிவிற்கு வந்து தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பும், ஏக்கமும் தமிழ் மக்களிடையே இருந்து வந்தது. முப்பது வருடங்களுக்குப் பின்னர் ஒருவாறு அதற்கு ஒரு விடை காணப்பட்டு மக்கள் இன்று உயிர்ப்பயம் இல்லாதவொரு அமைதியான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது தமிழரின் நம் பிக்கை வாசகம். ஆனால் அது கடந்த நாற்பது வருடங்க ளாக இலங்கைத் தமிழருக்குப் பொருந்தாத ஒன்றாகவே இருந்து வருகிறது. வெறுமனே தைப்பொங்கல் தினங்க ளில் அரசியல் தலைவர்களினாலும், மதப் பெரியார்களி னாலும் வெளியிடப்படும் வாழ்த்துச் செய்திகளிலேயே இவ்வாசகம் தொடர்ந்து நிலைத்து நிற்கின்றது. இலங்கைத் தமிழரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக அன்றுமுதல் இன்றுவரை இருந்துவரும் தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட்டதாக இதுவரை வரலாற்றில் பதியப்படவில்லை.
யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்படும்வரை அதுபற் றியே கூக்குரலிட்டு வந்த தமிழ்த் தலைமைகள் இன்று யுத்தம் முடிவிற்கு வந்து நான்கு வருடங்களாகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் எதிலும் ஈடுபடாம லிருப்பது பெரும் வேதனைதரும் விடயமாகவுள்ளது. நாட்டில் அமைதிச் சூழல் ஏற்படுத்தப்பட்ட பின்னரும் மக்கள் மத்தியில் குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதி லேயே பல தமிழ்த் தலைமைகள் குறியாக உள்ளன.
இதற்கு சர்வதேசத்தில் வாழும் புலம்பெயர் சமூகத்தி லுள்ள சிலரும், உள்ளூரிலுள்ள பல தமிழ் ஊடகங்க ளுமே பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. இவ்விரு சாராருக்கும் சமூகத்தை விடவும் அவர்களது தனிப்பட்ட தேவைகள் நிறையவே உள்ளது. உள்நாட்டில் அமைதி நிலை ஏற்பட்டால் வெளிநாடுகளில் தஞ்ச மடைந்துள்ள பலரும் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவர் என்பது புலம்பெயர்ந்தோர் பலரின் கவலையாக உள்ளது. அவர்களில் பலர் அங்கே அந்நாட்டுப் பணக்காரரை விடவும் செல்வந்தர்களாக வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கு மாணவர் விஸாவில் சென்ற பலர் அங்கே சுப்பர் மார்க்கட்டுக்களுக்குச் சொந்தக்காரர் களாகி பெரும் தொழிலதிபர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் அமைதிநிலை ஏற்பட்டு தமிழருக்குத் தீர்வும் வழங்கப்பட்டுவிட்டால் இங்கே வந்து அவர்களால் என்ன செய்ய முடியும்? அதற்காக அங்கே பணமுதலைகளாக இருக்கும் அவர்கள் இங்குள்ள சில சில்லறை அரசியல்வாதிகளுக்குச் சில்லறைகளை வீசியெறிந்து இவர்கள் மூலமாக மாணவ சமூகத்தைத் தூண்டிவிட்டு நாட்டில் குழப்பநிலையைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றார்கள். இதுவே உண்மை. இதற்காக இவர்கள் உள்ளூரில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் சிலவற்றையும், முகவரியில்லாது இயங்கும் பல தமிழ் இணையங்களையும் தமது பணக் கட்டுப் பாட்டில் வைத்தும் உள்ளனர்.
இத்தகைய தமிழ் ஊடகங்களும் தாம் தமிழரின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு வெளிநாட்டுச் சில்லறைகளுக்கு மயங்கி பொய்யுரைத்து வருகின்றன. இன்று இலங்கையிலிருந்து வரும் எத்தனை தமிழ் ஊடகங்கள் தமிழருக்கு நல்லதோர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமென உண்மையாகக் குரல் கொடுக்கின்றன என்றால் அது பெரும் கேள்விக்குறியிலும், சர்ச்சையிலுமே போய் முடியும். இந்த நல்லதோர் அரசியல் தீர்வு எனும் உயர்ந்த எண்ணத்துடன் தமிழ் ஊடகங்கள் உண்மை யாகச் செயற்பட்டிருந்தால் தீர்வு எப்பொழுதோ கிடைத் திருக்கும் என்பதே உண்மையிலும் உண்மை. எப்பொழு துமே அரசாங்கத்தை விமர்சிப்பதையே இவர்கள் தமது கடப்பாடாகக் கொண்டியங்கி வருகிறார்கள்.
அன்று புலிகள் விட்ட ஒருசிறு தவறையோ அல்லது இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விட்டுவரும் தொடரான தவறுகளில் ஒன்றையேனும் கூட இவர்கள் சுட்டிக்காட்ட முற்படுவதில்லை. மாறாக அதை மூடி மறைப்பதில் அவர்களைவிடவும் இவர்கள் மும்மரமாக உள்ளனர். தமிழ்த் தேசியத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டியங்கும் இப்பத்திரிகைகள் சமூகத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
உண்மைகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். இத் தைப்பொங்கல் தினத்துட னாவது சமூகத்தின் நன்மைக்காக துளியளவாவது சிந்தித்துச் செயற்பட திடசங்கற்பம் கொள்ள வேண்டும். தமிழ்க் கூட்டமைப்பிற்கு எதிராக அல்லது அரசாங்கத் திற்கு ஆதரவாக எழுதினால் உங்களது ஊடகங்களை மக்கள் நிராகரித்துவிடுவார்கள் என நினைப்பது போன்ற முட்டாள்தனம் வேறெதுவுமாக இருக்க முடியாது. பணம் உழைப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டியங்கும் முதலாளிவர்க்கத்திற்கு ஊடக ஜாம்பவான்களாகிய நீங் கள் உண்மையை எடுத்துக் கூற வேண்டும். தமிழ்க் கூட் டமைப்பிற்கு அறிவுரை கூறி கட்டுரை எழுதும் சாணக் கியமான பத்திரிகை ஆசிரியர்களை கூட்ட மைப்பின் பத்திரிகையாளர்களின் சொற்கேட்டு ஒதுக்கி வைக்கும் நிலைக்கு எதிராக ஊடகச் சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.
இத்தகைய செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து தமிழர் வாழ்வில் நல்வழியைக் காண உதவுவோம் என தைப்பொங்கல் தினத்தில் உறுதிமொழி பூண வேண்டும். இலங்கைத் தமிழர் வாழ்வில் வருடாவருடம் வெறுமனே எதிர்பார்ப்புடன் மட்டும் வந்து செல்லும் தைப்பொங்கல் தினத்திற்கு இவ்வருடத்துடன் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். 2014ஆம் ஆண்டு பிறக்கும் அடுத்த தைப்பொங்கல் தினத்தில் இலங்கைத் தமிழர் தமக்குரிய அரசியல் அந்தஸ்த்துடன் உரிமைகளைப் பெற்று வாழும் சமூகமாக வாழ தமிழ் ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசியல் மற்றும் மதத் தலைவர்களினால் ஆண்டாண்டு காலமாக விடுக்கப்பட்டுவரும் தை பிறந்தால் வழிபிறக்கும், தமிழர் வாழ்வில் ஒளி பிறக்கும் எனும் வாழ்த்துச் செய்திகளை வருடாவருடம் அவர்களது புகைப்படங்களும் பிரசுரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாது இந்தத் தமிழர் புதுவருடமான தை வருடத்துடனாவது ஆக்கபூர்வமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:
Post a Comment