Monday, January 14, 2013

புலிகளுடன் தொடர்புடைய குர்திஷ் பெண்கள் கொலை!

Monday, January 14, 2013
பாரிஸ்::புலிகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மூன்று குர்திஷ் பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குர்திஷ் தொழிலாளர் கட்சியின் இணை ஸ்தாபகர் உள்ளிட்ட மூன்று குர்திஷ் இயக்க செயற்பாட்டாளர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் பாரிசில் அமைந்துள்ள குர்திஷ் தகவல் மையத்தில் வைத்து இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பெண்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று பெண்களும் தலையில் சுடப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் புலிகளுக்கு ஆதரவாக பாரிசில் நடைபெறும் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment