Monday, January 14, 2013
சென்னை::பொங்கல், காணும் பொங்கலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினா, எலியட்ஸ் பீச்சில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.மாட்டு பொங்கலும் மறுநாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மக்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, தீவுத் திடல் பொருட்காட்சி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடல் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்க செல்வார்கள். அதே போன்று முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபடுவார்கள். தியேட்டர்களிலும் கூட்டம் அலைமோதும்.
குறிப்பாக மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் கூட்டம் அலை மோதும். மெரினாவில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும் குளிப்பவர் களை தடுக்க கடற்கரை ஓரம் ஏராளமான போலீ சார் குவிக்கப்பட உள்ளனர். பொங்கல், காணும் பொங்கல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் 18 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். இதற்கான பணியை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர்கள் ராஜேஸ்தாஸ், தாமரை கண்ணன் செய்து வருகின்றனர். அதேபோல, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேளிக்கை விடுதிகள், பொழுது போக்கு பூங்காக்கள், பொருட்காட்சிகள், பூங்காக்களில் மக்கள் அதிகமாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அங்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment