Wednesday, January 9, 2013

பாதுகாப்பு, மீட்பு பணிக்காக கடலோர காவல் படைக்கு அதிநவீன ரோந்து கப்பல்!

Wednesday, January 09, 2013
சென்னை::கிழக்கு பிராந்திய கடலோர காவல் படைக்கு புதிதாக ராஜ் கமல் என்ற அதிநவீன ரோந்து கப்பலை மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஒப்படைத்தார். சென்னை துறைமுகத்தில் இன்று காலை அதற்கான நிகழ்ச்சி நடந்தது. இந்திய கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் எம்பி. முரளிதரன், கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்பி. சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: இந்திய கடலோர பகுதியில் பாதுகாப்பு பணிக்காக 85 ரோந்து கப்பல்கள் ஈடுபட்டு வருகிறது. தற்போது புதியதாக ராஜ்கமல் என்ற அதிவேக திறன் கொண்ட கப்பல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது. இந்திய மீனவர்கள் பாதுகாப்பு மீட்பு பணியில் அதிவேகமாக செயல்படும். கிழக்கு கடலோர பாதுகாப்பு பணிக்காக மேலும் 77 ரோந்து கப்பல்கள் வாங்கப்பட உள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுத்து நிறுத்தவும், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லாமல் இருக்கவும் அவர்களை கண்காணிக்க மீன்பிடி படகுகளில் ஜிபிஆர் அதிநவீன கருவி பொருத்தும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. மீனவர்கள் தாக்குதல் குறித்து இந்திய, இலங்கை அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உள்ளது. இவ்வாறு இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.

No comments:

Post a Comment