Monday, January 07, 2013
சென்னை::""தி.மு.க., பொதுக் குழுவில், தலைவர் பதவிக்கு முன்மொழியக் கூடிய வாய்ப்பு, எனக்கு வருமானால், ஸ்டாலினைத் தான் முன்மொழிவேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி உறுதி தெரிவித்தார். ஸ்டாலினை தலைவராக்குவது குறித்து, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் ஏற்கனவே முன்மொழிந்துள்ளதால், தற்போது, தான் அதை வழி மொழிவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழா ஒன்றில், "தமிழ் சமுதாய மேன்மைக்காக, எனக்குப் பின் ஸ்டாலின் பாடுபடுவார்' என்று கருணாநிதி தெரிவித்தார்.
இது குறித்து, கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அழகிரி, "தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல; இதை கருணாநிதியும், ஸ்டாலினும் ஏற்கன@வ தெரிவித்துள்ளனர்' என, காட்டமாக கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், நேற்று தி.மு.க., மாவட்ட செயலர் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலர்கள், அடுத்த தலைவர் யார் என்பதை வெளிப்படுத்த @வண்டும் என, கருணாநிதியை வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பின், கருணாநிதி அளித்த பேட்டியின் போது, ""இந்த கூட்டத்திற்கு, அழகிரிக்கு அழைப்பு விடுக்க, அவர் மாவட்ட செயலர் அல்ல. "தி.மு.க., என்ற அரசியல் இயக்கத்திற்கு, எனக்கு பின் ஸ்டாலின் வருவார்' என, நான் பேசவில்லை. நான் அப்படி சொல்லியிருந்தால், அதிலே என்ன தவறு? ஏன் ஸ்டாலின் வரக் கூடாதா? அவர் தி.மு.க., இல்லையா,'' என, துவக்கத்தில் கோபத்தோடு கேள்வி எழுப்பினார்.
முன்மொழிவேன் :
தொடர்ந்து, இது தொடர்பான கேள்விகள் எழுந்த நிலையில், "தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழிவேன்' என்று தன் கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார் கருணாநிதி. இது குறித்து அவர் கூறியதாவது: தி.மு.க., ஒரு ஜனநாயக இயக்கம். குறிப்பாக, கட்சித் தேர்தலில், தலைவராகவோ, பொதுச் செயலர் பதவிக்கோ ஒருவர் நிற்க வேண்டுமென்றால்,
அதை, பொதுக் குழுவில் முன்மொழிந்து, பெரும்பான்மையோர் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அப்படி முன்மொழியக் கூடிய ஒரு வாய்ப்பு, எனக்கு தனிப்பட்ட முறையிலே வருமேயானால், அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி, ஸ்டாலினை தான் முன்மொழிவேன். இது ஏற்கனவே அன்பழகன் முன்மொழிந்தது; அதை நான் வழி மொழிவதாகத் தான் அர்த்தம். ஸ்டாலின் தலைவராக, ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டாமென, அழகிரியை வலியுறுத்த, இது சர்வாதிகார கட்சி அல்ல; ஜனநாயகக் கட்சி. ஸ்டாலினை நான் முன்மொழிந்தால், கட்சியின் ஒரு உறுப்பினர் கூட, ஸ்டாலினை எதிர்த்து நிற்க உரிமை உண்டு. இவ்வாறு கருணாநிதி கூறினார்.
கூட்டணியில் தே.மு.தி.க.,
நேற்றைய பேட்டியின் போபாது, "லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் இணைய வாய்ப்பு இருக்கிறதா?' என்ற கேள்வியை நிருபர்கள் எழுப்பினர். அதற்கு, கருணாநிதி, ""தே.மு.தி.க.,விலே, "தி.மு.க.,' என்பதும் இருக்கிறதே,'' என, பதிலளித்தார். ஏற்கனவே, இரு கட்சிகளும் இணக்கம் காட்டி வரும் நிலையில், இந்த பதில் மூலம், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறப் போவது உறுதியாகியுள்ளது என்கிறது அக்கட்சி வட்டாரம். இதற்கிடை@ய, மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டியில், ""தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடரும்,'' என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமையின் முடிவுக்கு எதிராக செயல்பட்டால்... கருணாநிதி மறைமுக எச்சரிக்கை :
தலைமையின் முடிவுக்கு எதிராக, கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தால், இனி கட்சி வேடிக்கை பார்க்காது; நடவடிக்கை எடுக்கும்' என, மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், அழகிரிக்கு மறைமுகமாக, கருணாநிதி எச்சரிக்கை விடுத்து பேசியதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில் மாவட்ட செயலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கு, தொகுதி வாரியாக, குறைந்தபட்சம், 2 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில மாவட்ட செயலர்கள்,
தங்களது லோக்சபா தொகுதிகள் அடங்கிய மாவட்டம் சிறியது என்றும், வசூலிக்க தொழில் நிறுவனங்களும் இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், தர்மபுரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட,எட்டு மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நிதி குறைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: மாவட்ட செயலர்கள் சிலர் பேசுகையில், "ஸ்டாலினை அடுத்த தலைவராக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.
தென் மண்டலத்தைச் சேர்ந்த, மாவட்ட செயலர் ஒருவர் பேசுகையில், "அண்ணன் அழகிரியும், தம்பி ஸ்டாலினும் இணைந்திருந்தால், தென் மண்டலத்தில் உள்ள, அனைத்து லோக்சபா தொகுதிகளையும் தி.மு.க., கைப்பற்றும்' எனக் கூறியுள்ளார்.
அப்போது கருணாநிதி பேசியதாவது:
தலைமையின் முடிவுக்கு எதிராக, கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தால், இனி கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது; நடவடிக்கை எடுக்கும். கூட்டணி குறித்து, நான் முடிவு செய்து கொள்கிறேன். லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளை கைப்பற்றினால் தான், டில்லியில் தி.மு.க., சக்தி வாய்ந்த கட்சியாக வலம் வர முடியும். அதனால், உங்களுக்குள்ளே இருக்கும், குழு அரசியலை தவிர்த்து, கட்சி வலு பெற உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


No comments:
Post a Comment