Sunday, January 06, 2013
இலங்கை::புலிகளின் தற்கொலை குண்டுகளுக்கு பயப்படாத நான், நாட்டின் எதிர்காலத்திற்காக சிறைக்கு செல்லவும் தயார் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் விமல் வீரவங்ச தொடர்ந்து தெரிவிக்கையில்,
"நீதிமன்றத்ததை பிரதம நீதியரசர் அவமதித்தாரா? இன்றேல் நானா நீதிமன்றத்தை அவமதித்தேன். என்பதனை முதலில் பார்க்கவேண்டும்.
கோல்டன் கீ வழக்குத்தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை மதிக்காமல் சொத்துக்களை தனது தங்கைக்கு கொள்வனவு செய்த நீதியரசர் நீதிமன்றத்தை அவமதித்தாரா? அல்லது நீதியரசரின் செயற்பாடுகளை நாட்டுக்கும் மக்களுக்கும் தெளிவுப்படுத்தும் நானா நீதிமன்றத்தை அவமதித்தேன்.
30 வருடங்கள் நாட்டை ஆட்டிப்படைத்த புலிப்பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்காக புலிகளின் தற்கொலை குண்டுகளுக்கு அஞ்சாதவன் நான். நீதியரசர் விவகாரத்தில் சர்வதேச சூழ்ச்சிகள் இருக்கின்றன. அதனை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் முன்கொண்டுச்செல்வேன்.
எனக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்யுங்கள் நான் அஞ்சமாட்டேன். நாட்டுக்காக சிறைகளுக்கு செல்வதற்கு தயார். 1000 வழக்குகளையும் 1000 சிறைகளையும் நான் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். இந்த நீதிமன்றத்தில் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும்" என்றார்.

No comments:
Post a Comment