Sunday, January 13, 2013

இந்திய மீனவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் செவ்வாய்கிழமை யாழ்ப்பாண மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

Sunday, January 13, 2013
இலங்கை::இந்திய மீனவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் செவ்வாய் கிழமைக்கு பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த யாழ்ப்பாண மீனவர்கள் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து வரும் மீனவர்கள் தமது கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, வடமாகாண மீனவர்கள் தொடர்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு எதிர்வரும் செவ்வாய் கிழமைக்க முன்னர் தீர்வு ஒன்று கிடைக்காத பட்சத்தில், அதன் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மீனவர் சமாயத்தின்அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மனு ஒன்று, பாதுகாப்பு அமைச்சு, மீன்பிடித்துறை அமைச்சு மற்றம் இந்திய உயர்ஸ்தானிகரகம் என்பவற்றுக்கும் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment