Tuesday, January 8, 2013

யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!

Tuesday, January 08, 2013
இலங்கை::யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அனைத்து பீடங்களுக்குமான விரிவுரைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழக உப வேந்தர் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், விடுதி காப்பாளர்கள், பல்கலைக்கழக உயரதிகாரிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், மாணவர்களின் வரவு இன்று மிகக் குறைவாகக் காணப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment