Wednesday, January 30, 2013

இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் - அமெரிக்க செனட் சபை!

Wednesday, January 30, 2013
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் இரண்டு செனட்டர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். போர்க்குற்ற விடயத்தில் இலங்கை போதிய கவனத்தை செலுத்தவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பாத்திரத்தை கொண்டுள்ள பெற்றிக் லேஹி மற்றும் போப் கேசி ஆகிய இரு செனட்டர்களே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் தமது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்கள் இலங்கையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள செனட்டர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் காலத்தாமதம் செய்வது ஒருபக்க நடவடிக்கையை உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனநாயக கட்சி செனட்டர்கள் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment