Tuesday, January 15, 2013

புதிய பிரதம நீதியரசரை நியமிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்திற்கு எவராலும் சவால் விடுக்க முடியாது - பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி!

Tuesday, January 15, 2013
இலங்கை::புதிய பிரதம நீதியரசரை நியமிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்திற்கு எவராலும் சவால் விடுக்க முடியாது என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் நியமனம் குறித்து நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1996ம் ஆண்டு உச்ச நீதிமன்றின் நீதியரசராக ஷிரானி பண்டாரநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த நியமனத்திற்கு சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும், நிறைவேற்று அதிகார ஜனாதியின் உத்தரவுகளுக்கு எதிராக சாவல் விடுக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பிரதம நீதியரசரை ஏற்றுக் கொள்வதாக இல்லையா என்பதனை நீதவான்களும், சட்டத்தரணிகளுமே தீர்மானிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஷிரானி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஏற்கனவே விலக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் அவரால் பிரதம நீதியரசராக கடமையாற்ற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு சட்டம் பற்றிய போதிய தெளிவு இருக்கும் எனவும், இராணுவத்தினரை அழைத்து பலவந்தமாக அவரை வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது என கருதுவதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment