Sunday, January 06, 2013
இலங்கை::நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் எந்த தருணங்களிலும் பொதுமக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசியல் குற்றப் பிரேரணை தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
குருணாகலை - மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ;கலந்து கொண்டு உரையாற்றிய அவர்.. ஒவ்வொரு துறையினதும் அதிகாரங்களை அறிந்து அவற்றின் வரையறைகளை மீறாமல் செயற்படுவதன் ஊடாகவே ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என குறிப்பிட்டார்.
தன்னிச்சையாக செயற்பட முடியாது, அவ்வாறு செயற்பட எமக்கு அதிகாரமும் இல்லை.
நீதிமன்றத்திற்கும் அரசியலுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரங்கள் அதிகம்.
அவற்றை நாட்டு மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்த முடியும்.
இந்த அரசாங்கத்திற்கு வெறுமனே மூன்றில் இரண்டு அதிகாரம் இல்லை.
அதனுள் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது.
இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இன்று மதியம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றபிரேரணை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
குற்றபிரேரணை குறித்து எதிர்கட்சித் தலைவர் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு தாம் ஆதரவளிப்பதாக தேசிய சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் ஒரு செயற்பாடான குற்றவியல் பிரேரணை விசாரணைக்கான சட்டம் போதுமானதாக இல்லை என்பதால் தேவையான அதிகாரத்தை பெற்றுக்கொள்ள புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி தரப்பினர் நேற்று தெரிவித்திருந்தனர்.

No comments:
Post a Comment