Monday, January 7, 2013

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை!

Monday, January 07, 2013
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேர்த் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குடும்பஸ்த்தரான தமிழர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவரின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல்களை அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் வழங்கவில்லை.
நெஹ்ரூ மற்றம் மனுஸ் தீவுகளில் புகலிட முகாம்கள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக குறித்த நபர் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு கடத்தப்படக் கூடுமென்ற அச்சத்தினால் குறித்த புகலிடக் கோரிக்கையாளர் உயிரை மாய்த்துக்கொண்டதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் எந்தவிதமான உதவிகளையும் வழங்குவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment