Thursday, January 10, 2013

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு நடத்திய விசாரணையின் போது அவர் குற்றவாளியெனக் காணப்பட்டுள்ளார் - நிமல் சிறிபால டி சில்வா!

Thursday, January 10, 2013
இலங்கை::பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு நடத்திய விசாரணையின் போது அவர் குற்றவாளியெனக் காணப்பட்டுள்ளார் எனவும் அவரை பதவி நீக்கும் யோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சற்று நேரத்துக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனையை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த வழிமொழிந்தார் என்பதோடு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா, மேற்படி யோசனைக்கு எதிராக நீண்ட நேரம் கருத்துக்களை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment