Friday, January 11, 2013

கொள்கலன்களை சோதனையிடும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை!

Friday, January 11, 2013
இலங்கை::கொழும்பு துறைமுகத்தினுள் வருகின்ற கொள்கலன்களை சோதனையின் பின்னர் விடுவிப்பதற்கான பணிகளை மேலும் துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொள்கலன்களை விரைவில் ஸ்கேன் செய்வதற்கான நடவடிக்கைகளின் பொருட்டு நேற்று புதிய கட்டடமொன்று திறந்துவைக்கப்பட்டதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான ஜீ.ஏ.லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இதன் மூலம் கொள்கலன்களை சோதனையிடும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே ஸ்கேன் முறையில் சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் அதற்கென புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டமை அந்தப் பணிகளை மேலும் இலகுவாக்கியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதற்கு முன்னர் கொள்கலன்கள் ஒருகொடவத்தையிலுள்ள சோதனையிடும் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு ஸ்கேன் சோதனை நடத்தப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டு வந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment