Monday, January 7, 2013

21 ஆயிரம் யூரோக்களை கடத்த முயன்றவர் கைது!

Monday, January 07, 2013
இலங்கை::35 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த ஒருவர் விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 21 ஆயிரம் யூரோக்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு எடுத்துச் செல்லமுற்பட்ட கெமருன் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்கள் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment