Sunday, January 13, 2013

2ஜி ஊழலில் கருணாநிதி, சோனியாவுக்கும் பங்கு:சுப்பிரமணிய சுவாமி!

Sunday, January 13, 2013
ராமேஸ்வரம்::2ஜி ஊழலில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி, கருணாநிதி, சோனியாவுக்கு தொடர்பு உள்ளது,''இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.நேற்று ராமேஸ்வரம் வந்த அவர் கூறியதாவது:

இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில், இந்துக்கள் அடிமையாக வாழ்கின்றனர். உதாரணம், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் வசிக்கும் இந்துக்கள். இதற்கு, மாநில அரசு விரைவான தீர்வு காண வேண்டும். "2 ஜி' அலைக்கற்றை பிரச்னையில், 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி, கருணாநிதி, சோனியாவுக்கு தொடர்பு உள்ளது.

கருணாநிதி ஆட்சியிலும், இதே மின்தடை இருந்தது, தற்போது, ஜெயலலிதா மீது மட்டும் குற்றம்சாட்ட முடியாது. சேது சமுத்திர திட்டத்திற்காக, ராமர் பாலத்தை உடைக்க அனுமதிக்க மாட்டேன். அடுத்த மாதம் 15ம் தேதி, தனுஷ்கோடியில் ராமர் பாலத்தை பார்வையிட உள்ளேன்,'' என்றார்.

No comments:

Post a Comment