Tuesday, December 4, 2012

தீர்ப்பு சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - சபாநாயகர் சமல் ராஜபக்ஸ!

Tuesday, December 04, 2012
இலங்கை::சபாநாயகர் என்ற வகையில், தாம் வழங்கும் தீர்ப்பு சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபையில் முன்வைத்த கருத்துக்களை கவனத்திற்கொண்டே சபாநாயகர் இதனைக் கூறினார்.

சபாநாயகர் அண்மையில் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஸ செயற்படுவதாக பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அந்த நடவடிக்கைகள் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை அலட்சியம் செய்வதாக அமைந்துள்ளதென பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் விஜேதாஸ ராஜபக்ஸ அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் என்ற வகையிலேயே அவர் செயற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment