Tuesday, December 4, 2012

இந்திய கடல் எல்லையை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை தங்களால் பாதுகாக்க முடியாது - புதுவை பிராந்திய கடற்படை அதிகாரி அமர்.கே.மகாதேவன்!

Tuesday, December 04, 2012
சென்னை::இந்திய கடல் எல்லையை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை தங்களால் பாதுகாக்க முடியாது என்று தமிழகம் மற்றும் புதுவை பிராந்திய கடற்படை அதிகாரி அமர்.கே.மகாதேவன் தெரிவித்துள்ளார்.

சென்னை போர் நினைவுச் சின்னத்தில் இன்று கொண்டாடப்பட்ட 41வது கடற்படை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய கடல் எல்லைகளில் தமிழக மீனவர்கள் யாரும் தாக்கப்படுவதில்லை என்று கூறியுள்ள அவர், இந்திய கடல் எல்லைக்குள் மட்டுமே தமிழக மீனவர்களை தங்களால் காப்பாற்ற முடியும் என்று கூறினார்.

தமிழக மீனவர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டது குறித்து இலங்கை கடற்படையினரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அவர்கள் விடுதலை பெற அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எல்லையை தாண்டும் மீனவர்களை தங்களால் பாதுகாக்க முடியாது என்று மகாதேவனின் இந்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment