Tuesday, December 11, 2012
புதுடெல்லி::இலங்கை பாதுகாப்பு படையினருக்கு குறுகிய மற்றும் நீண்ட கால இரணுவ பயிற்சிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோனி குறிப்பிட்டுள்ளார்.
லோக் சபா உறுப்பினர்கள் இருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர்; நேற்று இதனை தெரிவித்தார்.
தொழிநுட்ப மற்றும் தொழிநுட்பம் தவிர்ந்த பயிற்சிகள் இதனடிப்படையில் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்குவதாக, லோக் சபாவுக்கு அவர் எழுத்து மூலம் அறிவித்தார்.
இலங்கை உள்ளிட்ட ஏனைய அயல் நாடுகளுக்கு இவ்வாறான இராணுவ உதவிகள் வழங்கப்படும் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோனி குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment